தி.மு.க.வின் 3-வது ஊழல் பட்டியல்: புதிய ஆடியோவை வெளியிட்டார் அண்ணாமலை

2ஜி விசாரணை தொடர்பாக ஆ.ராசா எம்.பி, ஜாபர்சேட் இடையேயான 2-வது உரையாடல் அடங்கிய ஆடியோவை அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Update: 2024-01-27 15:00 GMT

கோப்புப்படம்

சென்னை,

தமிழக பா.ஜனதா தலைவர் கே.அண்ணாமலை, 'தி.மு.க. ஊழல் பட்டியல்' என்ற பெயரில், தி.மு.க.வினரின் சொத்து விவரங்கள் அடங்கிய பட்டியல், அரசு துறை ஒப்பந்தங்கள் தொடர்பான விவரங்கள் அடங்கிய பட்டியல் ஆகியவற்றை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டார்.

அதன்பிறகு, ''தி.மு.க.வின் 3-வது ஊழல் பட்டியல்'' என்று குறிப்பிட்டு, 2ஜி விசாரணை தொடர்பாக, முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு எம்.பி., மற்றும் முன்னாள் உளவுத்துறை உயர் அதிகாரி ஜாபர்சேட் ஆகியோருக்கு இடையேயான உரையாடல் அடங்கிய ஆடியோவை 'எக்ஸ்' சமூகவலைதளத்தில் வெளியிட்டார்.

தொடர்ந்து, 2ஜி விசாரணை தொடர்பாக, முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா எம்.பி., முன்னாள் உளவுத்துறை உயர் அதிகாரி ஜாபர்சேட் ஆகியோருக்கு இடையேயான உரையாடல் அடங்கிய ஆடியோவை கடந்த 17-ந்தேதி அண்ணாமலை 'எக்ஸ்' சமூகவலைதளத்தில் வெளியிட்டிருந்தார்.

இந்தநிலையில், 'தி.மு.க.வின் 3-வது ஊழல் பட்டியல்' என்று குறிப்பிட்டு, 2ஜி விசாரணை தொடர்பாக, முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா எம்.பி., முன்னாள் உளவுத்துறை உயர் அதிகாரி ஜாபர்சேட் இடையேயான 2-வது செல்போன் உரையாடலை அடங்கிய ஆடியோவை அண்ணாமலை 'எக்ஸ்' சமூகவலைதளத்தில் இன்று வெளியிட்டு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.



Tags:    

மேலும் செய்திகள்