அன்னை மிரா பொறியியல் கல்லூரி மாணவிகள் சாதனை
மாவட்ட அளவிலான போட்டியில் அன்னை மிரா பொறியியல் கல்லூரி மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான மாவட்ட அளவில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் அன்னை மிரா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் சி.எஸ்.இ. முதலாமாண்டு மாணவிகள் சு.ஹரிணி, கீ.மோ.சொர்ணலட்சுமி ஆகியோர் முறையே கட்டுரை மற்றும் கவிதை போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்தனர்.
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விழாவில் கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் காந்தி மாணவிகளுக்கு ரொக்கப்பரிசாக தலா ரூ.10 ஆயிரம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். அப்போது கலெக்டர் வளர்மதி, எம்.எல்.ஏ. ஈஸ்வரப்பன் உள்ளிட்டோரும் பாராட்டினர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளை கல்லூரி நிறுவனரும், தலைவருமான எஸ்.ராமதாஸ், செயலாளரும் பொருளாளருமான ஜி.தாமோதரன், இயக்குனர்கள் பிரசாந்த், கிஷோர்குமார், முதல்வர் டி.கே.கோபிநாதன், துணை முதல்வர் டி.சரவணன், நிர்வாக அதிகாரி எஸ்.சாண்டில்யன் ஆகியோர் வாழ்த்தினர்.