அருணாசலேஸ்வரர் கோவிலில் 7-ந் தேதி அன்னாபிஷேகம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வருகிற 7-ந் தேதி அன்னாபிஷேகம் நடக்கிறது. அன்று பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Update: 2022-11-04 17:15 GMT

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வருகிற 7-ந் தேதி அன்னாபிஷேகம் நடக்கிறது. அன்று பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

அருணாசலேஸ்வரர் கோவில்

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது.

இக்கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் அன்னாபிஷேகமும் ஒன்றாகும்.

அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆகம விதிகளின்படி ஐப்பசி மாத ஆவணி நட்சத்திர தினத்தன்று உலக உயிர்களுக்கு உணவு அளிக்கும் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அன்னாபிஷேக விழா நடக்கிறது.

இந்த ஆண்டிற்கான அன்னாபிஷேக விழா வருகிற 7-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.

அதனால் அன்னாபிஷேகம் நடைபெறும் பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது. மாலை 6 மணிக்கு மேல் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

அமர்வு தரிசனம் ரத்து

மேலும் வருகிற 7-ந் தேதி மற்றும் 8-ந் தேதி ஆகிய நாட்களில் பவுர்ணமி வருகிறது..

அன்றைய தினங்களில் அதிகளவில் பக்தர்கள் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் பக்தர்கள் நெடுநேரம் காத்திருப்பதை தவிர்க்கவும், விரைந்து தரிசனம் செய்வதற்கு ஏதுவாகவும் 7 மற்றும் 8-ந் தேதிகளில் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.

மேலும் பவுர்ணமி தினத்தன்று எவ்வித தரிசனத்திற்கும் முன்னுரிமை வழங்கப்படமாட்டாது என்று கோவில் நிர்வாகத்தினர் தொிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்