அண்ணா பல்கலை., பொறியியல் கல்லூரிகளுக்கு அக்.3-ம் தேதியும் விடுமுறை...!

அண்ணா பல்கலை., உறுப்பு பொறியியல் கல்லூரிகளுக்கு அக்.3-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-09-30 08:28 GMT

சென்னை,

காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அதனை தொடர்ந்து 4, 5 ஆகிய தேதிகளில் ஆயுத பூஜை, மற்றும் விஜயதசமி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

அக்டோபர் 1-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை அரசு பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறையும் விடப்பட்டுள்ளது. இதேபோன்று, அனைத்து கல்லூரிகளும் விடுமுறை அளித்துள்ளது. சனிக்கிழமை 1-ம் தேதி அரசு விடுமுறை நாளாகும். 4 நாட்கள் தொடர் விடுமுறை வருகிற நிலையில் அக்டோபர் 3-ம் தேதி மட்டும் வேலை நாளாக உள்ளது.

அன்று ஒரு நாள் விடுப்பு அனுமதிக்கப்பட்டால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது.

இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் உறுப்பு பொறியியல் கல்லூரிகளுக்கு வரும் அக்.3-ம் தேதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நாளை முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு விடுமுறை கிடைத்துள்ளது. இதனால் மூலம் ஆயுதபூஜை விடுறைக்கு சோந்த ஊர்களுக்கு படையெடுக்கு மக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்