அண்ணா தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
14- வது ஊதிய ஒப்பந்தத்தை நிறைவேற்றக்கோரி அண்ணா தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சீர்காழி:
சீர்காழி அரசு போக்குவரத்து கழகம் முன்பு 14- வது ஊதிய ஒப்பந்தத்தை உடனே நடத்தக்கோரி அண்ணா தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தொழிற்சங்க கிளை செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். மத்திய சங்க பொருளாளர் நமச்சிவாயம், மத்திய சங்க நிர்வாகிகள் செல்வராஜ், ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். இணை செயலாளர் மணிமொழி வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில் 14- வது ஊதிய ஒப்பந்தத்தை காலம் தாழ்த்தாது உடனே நிறைவேற்ற வேண்டும். போக்குவரத்து தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் நகர்மன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, கலைச்செல்வி மதியழகன், வார்டு செயலாளர் சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.