வாய்மேட்டை அடுத்த தகட்டூர் ஊராட்சியில் நடைபெறும் அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட திட்ட இயக்குனர் பெரியசாமி ஆய்வு செய்தார். ஆய்வின் போது தகட்டூர் ஊராட்சியில் நடைபெறும் பணிகளை விரைவாக முடிக்க கேட்டுக்கொண்டார். அப்போது அவருடன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜு, பாஸ்கரன், ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி பாலகுரு, ஒன்றிய பொறியாளர் மணிமாறன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் தேத்தாக்குடி தெற்கு, தேத்தாக்குடி வடக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் குளங்கள் புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் தேத்தாகுடி வடக்கு பகுதியில் தடுப்புச்சுவர் கட்டும் பணிகள், சிறுதலை காடு பகுதியில் இருந்து மீனவர்கள் மீன் பிடிக்க செல்வதற்கு ஏதுவாக வனத்துறையுடன் இணைந்து சுமார் 3 கி.மீ தூரம் உள்ள சாலை மேம்பாடு உள்பட ரூ.1.25 கோடியில் வளர்ச்சி பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் பெரியசாமி பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின் போது வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராஜூ, ஒன்றிய பொறியாளர்கள் மணிமாறன், அருள்ராஜ் உள்பட உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.