அண்ணா மறுமலர்ச்சி திட்ட ஆலோசனை கூட்டம்
பஞ்சநதிக்குளம் கிழக்கு ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.
வாய்மேடு:
வாய்மேட்டை அடுத்த பஞ்சநதிக்குளம் கிழக்கு ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் வீரத் தங்கம் வரவேற்றார். வட்டாரவளர்ச்சி அலுவலர் ராஜு, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜலட்சுமி, சுகாதார ஆய்வாளர் அன்பரசு மற்றும் கூட்டுறவுத்துறை, வேளாண்மைதுறை, சுகாதாரத் துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பொதுமக்கள் குடிநீர், சாலை வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு கோரிக்கை மனுவை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரிடம் வழங்கினர்.இது குறித்து உரிய துறைகளுக்கு மனுக்களை அனுப்பி வைத்து உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். முடிவில் ஊராட்சி செயலாளர் கலையரசி நன்றி கூறினார்.