அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு
கயத்தாறில் அண்ணா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டத.
கயத்தாறு:
கயத்தாறில் அ.ம.மு.க. சார்பில் பேரறிஞர் அண்ணா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அவரது உருவப்படத்திற்கு கட்சியின் துணை பொதுச் செயலாளர் எஸ்.வி.எஸ்.பி.மாணிக்கராஜா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் கயத்தாறு மேற்கு ஒன்றிய செயலாளர் கணபதிபாண்டியன், கிழக்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரன், கோவில்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் பாஸ்கர், கயத்தாறு நகர செயலாளர் காந்தையாபாண்டியன், பஞ்சாயத்து தலைவர்கள் செட்டிகுறிச்சி முத்துலட்சுமிகிருஷ்ணசாமி, அகிலாண்டபுரம் பால்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.