தனது 45-வது பிறந்த நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற உதயநிதி

தனது தந்தையும், தி.மு.க. தலைவருமான முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தாயார் துர்கா ஸ்டாலின் ஆகியோரிடம் காலை தொட்டு ஆசி பெற்றார்.

Update: 2022-11-27 06:54 GMT

சென்னை,

தி.மு.க. இளைஞரணி செயலாளரான சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தனது 45-வது பிறந்த நாளை இன்று கொண்டாடினார். இதையொட்டி இன்று காலையில் எழுந்ததும் ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் தனது தந்தையும், தி.மு.க. தலைவருமான முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தாயார் துர்கா ஸ்டாலின் ஆகியோரிடம் காலை தொட்டு ஆசி பெற்றார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி ஸ்டாலின் பொன்னாடை அணிவித்தார்.

பதிலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உதயநிதிக்கு பட்டு வேஷ்டியை சால்வையாக அணிவித்தார். பின்னர் உதயநிதியின் தோளை தட்டிக் கொடுத்து உச்சி முகர்ந்தார். அதன் பிறகு உதயநிதியின் தோளில் கைபோட்டு அருகே அரவணைத்து வாழ்த்தினார். அப்போது அருகில் தயாநிதிமாறன் எம்.பி., அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் உடனிருந்தனர். அங்கிருந்த உறவினர்களும் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்