அஞ்சனை மைந்தன் ஆஞ்சநேயர் கோவில் குடமுழுக்கு
குத்தாலம் அருகே அஞ்சனை மைந்தன் ஆஞ்சநேயர் கோவில் குடமுழுக்கு நடந்தது;
குத்தாலம்
குத்தாலம் அருகே உள்ள ராஜகோபாலபுரம் கம்பர்காலனி அரச மரத்தடியில் அஞ்சனை மைந்தன் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் குடமுழுக்கு விழா நேற்று நடந்தது. முன்னதாக கோவில் வளாகத்தில் கணபதி ஹோமமும், விக்னேஸ்வர பூஜைகளும் நடைபெற்றன. பின்னர் கடங்கள் புறப்பட்டு அஞ்சனை மைந்தன் ஆஞ்சநேயக்கு குடமுழுக்கு நடந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ராஜகோபாலபுரம் கிராமமக்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.