சென்னிமலையில் ஆணழகன் போட்டி ஈரோட்டை சேர்ந்தவர் ஆணழகனாக தேர்வு
சென்னிமலையில் நடந்த ஆணழகன் போட்டியில் ஈரோட்டை சேர்ந்தவர் ஆணழகனாக தேர்வு செய்யப்பட்டாா்.;
சென்னிமலை
ஈரோடு மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கத்தில் உள்ள அனைத்து ஜிம் சார்பாக சென்னிமலையில் உள்ள சி.எஸ்.ஐ. திருமண மண்டபத்தில் சீனியர் மிஸ்டர் ஈரோடு - 2022 என்ற ஆணழகன் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட ஆணழகர்கள் கலந்து கொண்டனர். போட்டியின் இறுதியில் ஈரோடு ரைட் இன்பிட் ஜிம்மை சேர்ந்த வினோத் என்பவர் வெற்றி பெற்று "சாம்பியன் ஆப் சாம்பியன்" என்ற பட்டத்தை பெற்றார். அவருக்கு ஜிம் பயிற்சியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.