கால்நடை வளர்ப்பு பயிற்சி முகாம்

கயத்தாறு வட்டார விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு பயிற்சி முகாம் நடந்தது.

Update: 2023-02-14 18:45 GMT

கயத்தாறு:

கயத்தாறு வேளாண்மை விரிவாக்க மையத்தின் சார்பில் அட்மா மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் கால்நடைத்துறை மூலம் மாநில அளவிலான விவசாயிகள் பயிற்சிக்காக கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரிலுள்ள கால்நடைப் பண்ணைக்கு விவசாயிகள் அழைத்துச் செல்லப்பட்டனர். கால்நடை உதவி மருத்துவர்கள் சரவணன், சண்முகம் ஆகியோர் ஆடு, மாடு, கோழி, வெண்பன்றி வளர்ப்பு மற்றும் கால்நடைகளில் துல்லிய இனப்பெருக்க மேலாண்மை குறித்தும் பயிற்சியளித்தனர்.

இப்பயிற்சியில் ராஜாபுதுக்குடி, பன்னீர்குளம், கே.சிதம்பராபுரம், வடக்கு வண்டானம், தெற்கு வண்டானம், காப்புலிங்கம்பட்டி, தீத்தாம்பட்டி, தொட்டம்பட்டி, பொம்மையாபுரம், கே.குமாரபுரம், தங்கம்மாள்புரம், சிவஞானபுரம், கம்மாப்பட்டி ஆகிய கிராமங்களைச் சார்ந்த 70 விவசாயிகள் கலந்து கொண்டனர். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை கால்நடை உதவி மருத்துவர் மனோஜ்குமார், அட்மா வட்டார தொழில்நுட்ப மேலாளர் சாலமோன், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ரத்தினம்பால், ஜெயலெட்சுமி, வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்