கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

விருத்தாசலம் அருகே கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடந்தது.

Update: 2023-01-08 18:45 GMT

விருத்தாசலம், 

விருத்தாசலம் அருகே மு.பட்டி கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜெகப்பிரியா வசந்தகுமார் தலைமை தாங்கினார். இதில் விருத்தாசலம் கோட்ட கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் டாக்டர் பிச்சை கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.

இதில் விருத்தாசலம் கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவர் சரவணன் தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டு 300-க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு தோல் கழலை நோய் தடுப்பூசியும், 76 மாடுகளுக்கு அறுவை சிகிச்சையும், 53 பசுக்களுக்கு செயற்கை முறை கருவூட்டலும், 14 மாடுகளுக்கு ஆண்மை நீக்கமும், 217 மாடுகளுக்கு சிறப்பு சிகிச்சையும் அளித்தனர்.

மேலும் 61 விவசாயிகளுக்கு தாது உப்பு கலவை வழங்கப்பட்டது. தொடர்ந்து சிறந்த கால்நடை வளர்ப்பு முறைகளை பின்பற்றும் விவசாயிகளுக்கு பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது. முடிவில் துணைத் தலைவர் ரங்கநாதன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்