கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

திருக்கடையூர் அருகே கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்;

Update: 2022-12-28 18:45 GMT

திருக்கடையூர்:

திருக்கடையூர் அருகே கிடங்கள் ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு கால்நடை டாக்டர் மோகன கிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் அமுதா அன்பழகன் வரவேற்றார். முகாமில் கால்நடைகளுக்கு சினை ஊசி, நோய் தடுப்பூசி, கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் தடுப்பூசி ஆகியவை செலுத்தப்பட்டது. இதில் கால்நடை ஆய்வாளர் புருஷோத்தமன், கால்நடை உதவியாளர்கள், டாக்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்