கால்நடை பராமரிப்பு சிறப்பு முகாம்

பூம்புகாரில் நடந்த கால்நடை பராமரிப்பு சிறப்பு முகாமை மாவட்ட கலெக்டர் மகாபாரதி தொடங்கி வைத்தார்.

Update: 2023-07-27 18:45 GMT

திருவெண்காடு:

பூம்புகாரில் நடந்த கால்நடை பராமரிப்பு சிறப்பு முகாமை மாவட்ட கலெக்டர் மகாபாரதி தொடங்கி வைத்தார்.

கால்நடை பராமரிப்பு முகாம்

காவிரிப்பூம்பட்டினம் பால் கூட்டுறவு சங்கம், ஆவின் நிர்வாகம், கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் கால்நடை அறிவியல் மருத்துவ பல்கலைக்கழகம் இணைந்து, முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டை ஒட்டி பூம்புகார் சாயாவனம் பகுதியில் கால்நடை பராமரிப்பு சிறப்பு முகாம் நேற்று நடந்தது. முகாமிற்கு கால்நடை பராமரிப்பு மண்டல இணை இயக்குனர் விஜயகுமார் தலைமை தாங்கினார்.

தஞ்சாவூர் ஆவின் பொது மேலாளர் ராஜசேகர் கரிஷட்டி, திருவாரூர் பால்வள துணைப்பதிவாளர் விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் ஈஸ்வரன் வரவேற்றார். இதில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி கலந்து கொண்டு கால்நடை சிறப்பு முகாமை தொடங்கி வைத்தார்.

பரிசுகள் வழங்கினார்...

தொடர்ந்து கால்நடை பராமரிப்பு துறை மூலம் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை பார்வையிட்டார். மேலும் கால்நடைகளை சிறப்பாக பராமரித்தவர்களுக்கு பரிசுகளை கலெக்டர் வழங்கினார்.

இதில் நிவேதா முருகன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி, சீர்காழி ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன், சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முத்து மகேந்திரன், ரவி, ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பவல்லி ராஜா மற்றும் துணைத்தலைவர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் காவேரி பூம்பட்டினம் பால் கூட்டுறவு சங்க செயலாளர் அகோரம் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்