ஆறுமுகநேரி சோமநாத சுவாமி கோவிலில் ஆனி உத்திர திருவிழா
ஆறுமுகநேரி சோமநாத சுவாமி கோவிலில் ஆனி உத்திர திருவிழா நடைபெற்றது.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரியில் திருவாடுதுறை ஆதீனத்திற்கு பாத்தியப்பட்ட சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோவிலில் ஆணி உத்தர பெருந் திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் காலை மற்றும் இரவில் சப்பரபவனி மற்றும் பக்தி சொற்பொழிவு, நாதஸ்வர கச்சேரிகள், தீபாராதனைகள் நடைபெற்றன.
நேற்று முன்தினம் ஒன்பதாம் திருவிழா அன்று சுவாமி, அம்பாள் பூஞ்சப்பர பவனியும், இரவில் பஞ்சமூர்த்திகள் சப்பரப்பவனியும் நடைபெற்றது.பத்தாம் திருநாளான நேற்று காலையில் பூஞ்சப்பர பவனியும், மதியம் தீர்த்தவாரி அபிஷேகம் நடைபெற்றது. இரவில் சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று மீண்டும் கோவில் வந்தடைந்தனர். விழாவில் அனைத்து சமுதாய மக்களும் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.