சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் ஆனி திருமஞ்சன சிறப்பு வழிபாடு

சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் ஆனி திருமஞ்சன சிறப்பு வழிபாடு

Update: 2023-06-26 21:09 GMT

சென்னிமலை

ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் நேற்று யாக பூஜையுடன் சிறப்பு வழிபாடு தொடங்கியது. பின்னர் நடராஜர் மற்றும் சிவகாமி அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பின்னர் அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

அப்போது நடராஜ பெருமான் - சிவகாமி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்