ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆனி திருமஞ்சன திருவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆனி திருமஞ்சன திருவிழா நடைபெற்றது , இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ராமேசுவரம்,
அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாகவும், காசிக்கு நிகராக விளங்கும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவில்.இக்கோவிலுக்கு வெளிமாநிலங்கல் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருவர். இக்கோவிலில் இன்று ஆனி திருமஞ்சன திருவிழா நடைபெற்றது.
இத்திருவிழாவை முன்னிட்டு கோவிலின் மூன்றாம் பிரகாரத்தில் 1 லட்சம் ருத்ராட்சைகளால் ஆன மண்டபத்தில் வீற்றிருக்கும் நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாளுக்கு ஆனி திருமஞ்சன திருவிழாவை முன்னிட்டு இன்று பல்வேறு அபிஷேகங்கள் நடந்து சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் செய்யப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாளை தரிசனம் செய்து செல்கின்றனர்.