தாயிடம் பணம் கேட்டதால் ஆத்திரம்.... தொழிலாளியை அடித்துக்கொன்ற வாலிபர்

திருமுல்லைவாயலில் தாயிடம் பணம் கேட்டதால் ஆத்திரத்தில் தொழிலாளியை அடித்துக்கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-05-31 06:41 GMT

திருமுல்லைவாயல் வெங்கடேஸ்வரா நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் உமாமகேஸ்வரி (வயது 44). இவருடைய மகன் விக்னேஸ்வரன் (24). இவர்களுடன் உமா மகேஸ்வரியின் உறவினரான செல்வராஜ் என்ற ஏழுமலை (52) வசித்து வந்தார். உமாமகேஸ்வரி, செல்வராஜ் இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். செல்வராஜ் சம்பளத்தையும் உமா மகேஸ்வரி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு செல்வராஜ், மது அருந்துவதற்காக உமாமகேஸ்வரியிடம் ரூ.500 கேட்டார். அப்போது அங்கிருந்த விக்னேஸ்வரன், எதற்காக எனது தாயிடம் பணம் கேட்கிறாய்? என்று கேட்டு செல்வராஜியிடம் தகராறு செய்தார்.

மேலும் ஆத்திரத்தில் செல்வராஜை கையால் அடித்து, தரதரவென வீட்டுக்குள் இழுத்துச்சென்று கீழே தள்ளினார். பின்னர் அனைவரும் தூங்கி விட்டனர். நேற்று காலை எழுந்து பார்த்தபோது செல்வராஜ் இறந்து கிடந்தார். இதுபற்றி கொலை வழக்குப்பதிவு செய்த திருமுல்லைவாயல் போலீசார் விக்னேஸ்வரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்