அங்கன்வாடி பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
ஆற்காட்டில் அங்கன்வாடி பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆற்காட்டில் அங்கன்வாடி பணியாளர்கள், அங்கன்வாடி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் தமிழ்நாடு அரசு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாநில இணைச் செயலாளர் அமிர்தவள்ளி கலந்து கொண்டு 10 குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் பிரதான மையங்களை மினி மையமாக்குவதையும், ஐந்து குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் மையத்தை பிரதான மையத்தோடு இணைப்பதை கைவிடக் கோரியும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டியும், 10 ஆண்டு பணி செய்த உதவியாளர்களுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி பதவி உயர்வு வழங்க வேண்டியும் கண்டன உரை நிகழ்த்தினார். இதில் ஆற்காடு ரம்பா, பாரதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.