அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-04-18 17:57 GMT

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சி.மல்லிகா தலைமை தாங்கினார். செயலாளர் ஜூலி, மாநில செயற்குழு உறுப்பினர் தேவி, பொருளாளர் சரஸ்வதி, சி.ஐ.டி.யு. மாநில குழு உறுப்பினர் எம்.பி.ராமச்சந்திரன், சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் முரளி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூ.26 ஆயிரம் வழங்கிட வேண்டும். 10 ஆண்டுகள் பணி செய்த அங்கன்வாடி ஊழியர்களுக்கு நிபந்தனை இன்றி உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும். பணி நேரம் காலை 9.30 மணியில் இருந்து மாலை 3 மணி என மாற்றி அமைத்திட வேண்டும்.

தற்போது தமிழகத்தில் கொரோனா மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் அதிகரித்துள்ள சூழலில் குழந்தைகள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்களின் நலன்களை கருதி கோடை காலமான மே மாதத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்குவது போன்று அங்கன்வாடி மையங்களுக்கும் விடுமுறை அளித்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில், ஏராளமான அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்