அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-10 18:42 GMT

அன்னவாசல் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு கொட்டும் மழையில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார செயலாளர் பார்வதியம்மாள் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். 10 வருடம் பணி முடித்த உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். ஐ.பி.எப். பிடித்தம் செய்த தொகையை வழங்க வேண்டும். ஐ.பி.எப். தொகையில் இருந்து பணியில் உள்ள ஊழியர்களுக்கு கடன் வழங்க வேண்டும். மகப்பேறு விடுப்பு அரசு பெண் ஊழியர்களுக்கு வழங்குவது போல் 1 வருடம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

பொன்னமராவதி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் காலி பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு வட்டார தலைவர் இந்திரா தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட குழு உறுப்பினர் தீன், சங்கத்தின் வட்டார பொருளாளர் தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட தலைவர் கே.முகமதலி ஜின்னா, சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் சந்திரா, புதுக்கோட்டை ஒருங்கிணைப்பாளர் முத்தையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



Tags:    

மேலும் செய்திகள்