கண்களில் கருப்புத்துணி கட்டி சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கண்களில் கருப்புத்துணி கட்டி சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2023-04-01 19:55 GMT

தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் கண்களில் கருப்புத்துணி கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கண்களில் கருப்புத்துணி

தஞ்சை மாவட்ட தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் வீராசாமி, ராமச்சந்திரன், தினகரன், சுந்தரம், மலர்க்கொடி, உஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு சத்துணவு பணியாளர் சங்க மாநில தலைவர் ஆறுமுகம், மாநில துணைத்தலைவர் மதிவாணன், ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் முருகையன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கண்களில் கருப்புத்துணி கட்டிக்கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

காலை உணவுத்திட்டம்

ஆர்ப்பாட்டத்தில் வருவாய் கிராம ஓய்வூதியர்களுக்கு இணையாக மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் ரூ.6,750 வழங்க வேண்டும். அரசு துறை காலிப்பணியிடங்களில் தகுதியுள்ள சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை 50 சதவீதம் ஈர்த்து வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

தமிழக அரசு வழங்கும் காலை சிற்றுண்டி உணவு திட்டத்தை தனியாரிடம் விடுவதை கைவிட்டு விட்டு சத்துணவு திட்டத்தில் மைய பொறுப்பாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

முடிவில் நிதிக்காப்பாளர் விஜயாள் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்