அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட கிளையினர் அங்கன்வாடி மையங்களுக்கும் கோடைகால விடுமுறை விட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று 2-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் எஸ்தர் ராணி தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் 1,500 பேர் கலந்து கொண்டனர். இது தொடர்பான பேச்சுவார்த்தை முடியும் வரை போராட்டம் தொடரும் என அங்கன்வாடி ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.