கியாஸ் கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில் அங்கன்வாடி பெண் ஊழியர் பலி

கியாஸ் கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில் அங்கன்வாடி பெண் ஊழியர் பலியானார்.

Update: 2023-04-19 18:10 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த அத்தியானம் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன். இவரது மனைவி விஷ்ணு பாலா. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை, ஒரு ஆண் குழந்தை உள்ளது. விஷ்ணுபாலா அதே ஊரில் அங்கன்வாடி பணியாளராக வேலைபார்த்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் டீ போடுவதற்காக சென்றுள்ளார்.

அப்போது கியாஸ் கசிவு ஏற்பட்டிருந்ததை கவனிக்காமல் மின்விளக்கு சுவிட்சை போட்டுள்ளார். இதனால் தீபிடித்துள்ளது. இதில் விஷ்ணு பாலாவின் உடல்மீது தீ பட்டு படுகாயமடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கலவை அரசு மருத்துவமனையில் சேர்த்து, பின்னர் ரத்தினகிரி அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இதுகுறித்து கலவை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்