ரூ.85 லட்சத்தில் அங்கன்வாடி, ரேஷன் கடை கட்டிடம்

ரெட்டியார்சத்திரம் ஒன்றிய பகுதியில் ரூ.85 லட்சத்தில் அங்கன்வாடி, ரேஷன் கடை கட்டிடங்களை அமைச்சர் இ.பெரியசாமி திறந்து வைத்தார்.

Update: 2023-06-30 20:15 GMT

ரெட்டியார்சத்திரம் ஒன்றிய பகுதியில் ரூ.85 லட்சத்தில் புதிததாக அங்கன்வாடி கட்டிடங்கள், ரேஷன் கடை கட்டிடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் அமைச்சர் இ.பெரியசாமி கலந்துகொண்டு புதிய கட்டிடங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், ஆத்தூர் தொகுதியில் இன்னும் மூன்று மாதத்திற்குள் அனைத்து கிராமங்களிலும் குடிதண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்படும். அடுத்த வாரத்தில் ரெட்டியார்சத்திரம் ஒன்றிய பகுதியில் அனைத்து கிராமங்களுக்கும் சென்று மக்களைச் சந்திக்கிறேன் என்றார். விழாவில் திண்டுக்கல் மாவட்ட தி.மு.க. பொருளாளர் சத்தியமூர்த்தி, ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சிவகுருசாமி, துணைத் தலைவர் ராஜேஸ்வரி தமிழ்செல்வன், மாவட்ட கவுன்சிலர்கள் சுப்புலட்சுமி, ஆரோக்கிய சுதா, காமாட்சிபுரம் ஊராட்சி தலைவர் கணேஷ் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கொத்தப்புள்ளி ஊராட்சி தாதன்கோட்டை, கதிரனம்பட்டி, காமாட்சிபுரம் ஊராட்சி கட்டசின்னான்பட்டி, கோட்டபட்டி ஆகிய கிராமங்களில் அங்கன்வாடி கட்டிடமும், பழக்கனூத்து ஊராட்சியில் செம்படைப்பட்டி, ஒண்டிடவாடநாயக்கன்பட்டி, பழக்கனூத்து பகுதிகளில் அங்கன்வாடி கட்டிடமும், நரிப்பட்டியில் பகுதிநேர ரேஷன் கடை கட்டிடமும் திறந்து வைக்கப்பட்டது.

விழாவில் ஊராட்சி தலைவர்கள் சுந்தரி அன்பரசு, தங்கபாண்டி, ராதாதேவி சாமிநாதன், ஊராட்சி துணைத்தலைவர்கள் ரங்கசாமி, மல்லீஸ்வரி, ஊராட்சி செயலாளர் தமிழ்ச்செல்வன், மாவட்ட பிரதிநிதி ராமகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர்கள் ரமேஷ், மலைச்சாமி, விவேகானந்தன், தி.மு.க. பொறுப்பாளர்கள் ராஜேஷ்பெருமாள், உதயகுமார், ஒன்றிய செயலாளர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்