அகவிலைப்படி வழங்க கோரி அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் தட்டு ஏந்தி ஆர்ப்பாட்டம்

சேலத்தில் அகவிலைப்படி வழங்க கோரி அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் தட்டு ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-10-14 23:06 GMT

சேலம், 

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் சேலம் மாவட்ட குழு சார்பில் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் வடிவேலு தலைமை தாங்கினார். பொன்னுவேலு, லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் ரூ.7 ஆயிரத்து 850 வழங்க வேண்டும், குடும்ப ஓய்வூதியம், அகவிலைப்படி, மருத்துவப்படி, மருத்துவ காப்பீடு உள்ளிட்டவை வழங்கப்பட வேண்டும், சமூக பாதுகாப்பு திட்ட சிறப்பு ஓய்வூதியம் என்ற அரசாணையை மாற்றி சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் பென்சன் திட்டம் என்று அறிவிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் தட்டு ஏந்தி நின்று கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் ராஜம், ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்