அங்கன்வாடி மைய கட்டிட பூமிபூஜை

தாமரைக்குளம் பேரூராட்சியில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுவதற்கு பூமிபூஜை நடந்தது.

Update: 2023-03-10 19:00 GMT

பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட புதிய காலனியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.18 லட்சம் செலவில் அங்கன்வாடி மையம் கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் மலர்கொடி சேதுராமன், செயல் அலுவலர் ஆளவந்தார், கவுன்சிலர் முனியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பெரியகுளம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான சரவணக்குமார் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி வைத்தார். பேரூர் தி.மு.க. செயலாளர் கருத்தராசு, பேரூராட்சி கவுன்சிலர்கள் பாலாமணி பழனி முருகன், வசந்தா மூக்கையா, தேவகி தென்னரசு, கவிதா டென்சன், வடக்கு மாவட்ட தி.மு.க. தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்