ரூ.12 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம் அடிக்கல் நாட்டு விழா

கோவிந்தபேரியில் ரூ.12 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

Update: 2023-05-22 19:54 GMT

கடையம்:

கடையம் யூனியன் கோவிந்தபேரியில் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து ரூ.12 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மையம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. பி.எச்.மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் கோவிந்தபேரி பஞ்சாயத்து தலைவர் டி.கே.பாண்டியன், ஓ.பி.எஸ். அணி அமைப்பு செயலாளர் எஸ்.ராதா, மாவட்ட செயலாளர் வி.கே.கணபதி, அண்ணா தொழிற்சங்க செயலாளர் சேர்மத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்