ரூ.10 லட்சத்தில் அங்கன்வாடி கட்டிடம்; கலெக்டர் திறந்து வைத்தார்
தென்காசியில் ரூ.10 லட்சத்தில் அங்கன்வாடி கட்டிடத்தை கலெக்டர் துரை ரவிச்சந்திரன் திறந்து வைத்தார்.
தென்காசி சிதம்பரேஸ்வரர் கோவில் அருகில் நகராட்சி சார்பில் ரூ.10 லட்சம் செலவில் அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நகராட்சி தலைவர் சாதிர் தலைமை தாங்கினார். துணை தலைவர் கே.என்.எல்.சுப்பையா முன்னிலை வகித்தார். புதிய அங்கன்வாடி கட்டிடத்தை தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் பாரிசான், நகரமைப்பு ஆய்வாளர் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.