மாணவர்களுக்கு ரத்த சோகை கண்டறியும் முகாம்

அரசு பள்ளி மாணவர்களுக்கு ரத்த சோகை கண்டறியும் முகாம் நடைபெற்றது.;

Update: 2023-06-17 12:31 GMT

நாட்டறம்பள்ளி அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளயில் மாணவர்களுக்கான ரத்த சோகை கண்டறியும் முகாம் நடந்தது. பள்ளித் தலைமை ஆசிரியர் இளங்கோ தலைமை தாங்கினார். நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் சி.ரவிவர்மன் முன்னிலை வகித்தார். மருத்துவர்கள் டினா, டிசில்வா ஆகியோர் தலைமையிலான மரூத்துவக்குழுவினர் கலந்துகொண்டு 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் 540 மாணவர்களுக்கு பரிசோதனை செய்து ரத்த சோகை நோய் பாதித்த மாணவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் மற்றும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய பழங்கள், காய்கறிகள் குறித்து ஆலோசனை வழங்கினர்.

முகாமிற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் பழனி, செந்தில்குமார், லட்சுமணன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்