ரத்தசோகை நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஆணைக்காரன் சத்திரத்தில் ரத்தசோகை நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது

Update: 2022-09-08 18:06 GMT

கொள்ளிடம்:

கொள்ளிடம் ஒன்றியம் ஆணைக்காரன் சத்திரம் ஊராட்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் சார்பில் ரத்தசோகை நோய் விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு ஊட்டச்சத்து அலுவலர் சாந்தி தலைமை தாங்கினார், கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் முன்னிலை வகித்தார். ஊராட்சிதலைவர் கனகராஜ் வரவேற்றார். பயிற்சியில் மகளிர் திட்டம் மற்றும் பெண்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஊட்டச்சத்து அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோவிந்தராஜ், ஊராட்சி மன்ற துணை தலைவர் சிவப்பிரகாசம். மற்றும் மகளிர் குழுக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்