லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஆண்டாள் நீராட்டு உற்சவம்
சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஆண்டாள் நீராட்டு உற்சவம் நடைபெற்றது.
சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சாமி கோவிலில் பக்தோசித பெருமாள்- ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் தை மாதம் முதல் நாள் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு 3 நாட்கள் நடக்கும் ஆண்டாள் நீராட்டு உற்சவம் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று ஆண்டாளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, தங்க கேடயத்தில் எழுந்தருளி மங்கள வாத்தியங்களுடன் முக்கிய வீதிகள் வழியாக சென்று தக்கான்குளக்கரையில் எழுந்தருளினார்.
அங்கு திருமஞ்சனம், குளத்தில் நீராட்டு உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.