மேலும் ஒரு சிறுவன் பிடிபட்டான்
கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிச்சென்ற மேலும் ஒரு சிறுவன் பிடிபட்டான்
நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே அரசினர் கூர்நோக்கு இல்லம் செயல்பட்டு வருகிறது. சம்பவத்தன்று கூர்நோக்கு இல்ல வார்டனை தாக்கிவிட்டு 12 சிறுவர்கள் தப்பிச் சென்றனர். இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தப்பிச்சென்ற சிறுவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த தனிப்படை போலீசார் இதுவரை 6 சிறுவர்களை பிடித்து உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தென்காசியில் வைத்து மேலும் ஒரு சிறுவனை போலீசார் பிடித்தனர். தொடர்ந்து மற்ற 5 சிறுவர்களையும் தேடி வருகின்றனர்.