பழங்கால நாணய கண்காட்சி

பழனி அரசு அருங்காட்சியகத்தில் பழங்கால நாணய கண்காட்சி நடந்தது.;

Update: 2023-09-25 19:00 GMT

பழனி அரசு அருங்காட்சியகத்தில் நாட்டின் வரலாறு சார்ந்த புகைப்படங்கள், உலோக பொருட்கள், மண் குடுவைகள், கற்கால கருவிகள் என பழங்கால பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் இங்கு ஒவ்வொரு மாதமும் சிறப்பு கண்காட்சி நடைபெறுகிறது. அதன்படி நேற்று அருங்காட்சியகத்தில் பழங்கால நாணய கண்காட்சி தொடங்கியது.

இந்த கண்காட்சியில் சேர, சோழ, பாண்டியர் மற்றும் குப்தர் அரச கால பழங்கால நாணயங்கள், ஆங்கிலேயர், முகலாயர் காலத்து நாணயங்கள் மற்றும் சுதந்திரத்துக்கு முன்பு வெளியிடப்பட்ட நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதை பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் பலர் பார்த்து செல்கின்றனர்.

இதுகுறித்து அருங்காட்சியக அலுவலர் குணசேகரன் கூறுகையில், இந்த நாணய கண்காட்சி இன்று (அதாவது நேற்று) தொடங்கி வருகிற 3-ந்தேதி வரை நடைபெறுகிறது. பழனி சுற்று வட்டார பகுதி மாணவர்கள், பொதுமக்கள் பார்வையிட்டு பயன்பெற வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்