தமிழக கவர்னரின் முதன்மை செயலாளர் ஆனந்தராவ் விஷ்ணு பாட்டில் மத்திய அரசு பணிக்கு மாற்றம்
தமிழகத்தில் 1998-ம் ஆண்டு பணியில் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஆனந்தராவ் விஷ்ணு பாட்டில் (தற்போது தமிழக கவர்னரின் முதன்மை செயலாளர்) மத்திய அரசின் கல்வி மற்றும் எழுத்தறிவு துறையின் இணை செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
சென்னை,
தமிழக கவர்னரின் முதன்மை செயலாளர் ஆனந்தராவ் விஷ்ணு பாட்டில் மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-மத்திய அரசின் பல்வேறு துறைகளில் புதிய இணைச் செயலாளர்கள் மற்றும் இணைச் செயலாளர் அந்தஸ்திலான நியமனங்களை மேற்கொள்ள நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி தமிழகத்தில் 1998-ம் ஆண்டு பணியில் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஆனந்தராவ் விஷ்ணு பாட்டில் (தற்போது தமிழக கவர்னரின் முதன்மை செயலாளர்) மத்திய அரசின் கல்வி மற்றும் எழுத்தறிவு துறையின் இணை செயலாளராக நியமிக்கப்படுகிறார்.அவர் பதவியேற்கும் நாளிலிருந்து 5 ஆண்டுகளுக்கு அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை அந்த பதவியில் இருப்பார்'.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.