திருநகரில் வேரோடு மரம் முறிந்து சாய்ந்தது; 2 மணிநேரம் மின்தடை
திருநகரில் வேரோடு மரம் முறிந்து சாய்ந்தது. இதனால் 2 மணிநேரம் மின்தடை ஏற்பட்டது.
திருப்பரங்குன்றம்,
மதுரை மாநகராட்சி 94-வது வார்டு கம்பர் தெருவில் நேற்று காலையில் திடீரென்று ஒரு வேப்பமரம் வேரோடு சாய்ந்து ரோட்டில் விழுந்தது. மேலும் மரத்தின் ஒரு பகுதி தெருவிளக்கான மின் கம்பத்தில் சாய்ந்ததால் டிரான்ஸ்பார்மர் 'டமார்' என்ற சத்தத்துடன் தீ பரவியது. இதனால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் உதவி பொறியாளர் திருப்பதி தலைமையில் மின் ஊழியர்கள் சேதமடைந்த டிரான்ஸ்பார்மர் மற்றும் அறுந்து தொங்கிய மின்ஒயர்களை சரிசெய்தனர். சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு மின்வினியோகம் சரிசெய்யப்பட்டது.