கவிழ்ந்த தனியார் பார்சல் சர்வீஸ் கண்டெய்னர் லாரி

கவிழ்ந்த தனியார் பார்சல் சர்வீஸ் கண்டெய்னர் லாரி

Update: 2023-08-03 18:45 GMT

திருவாரூர் நகரத்திற்கு உட்பட்ட காரைக்காட்டுத்தெருவில் தனியார் பார்சல் சர்வீஸ் இயங்கி வருகிறது. சென்னையில் இருந்து திருவாரூருக்கு வந்த பார்சல் சர்வீஸ் கண்டெய்னர் லாரி திருவாரூரில் பார்சல்களை இறக்கிவிட்டு நாகப்பட்டினம் நோக்கி சென்றுள்ளது. அப்போது காணூர் என்கிற இடத்தில் லாரி சென்று கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

திருவாரூரில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் இந்த வழியில் தற்போது தேசிய நெடுஞ்சாலைக்கான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. அதற்காக சாலை ஓரத்தில் தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் இந்த பார்சல் கண்டெய்னர் லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்துள்ளது. இதையடுத்து திருவாரூரில் உள்ள தனியார் கிரேன் சர்வீசிற்கு தகவல் கொடுத்ததின் அடிப்படையில் கவிழ்ந்த கண்டெய்னர் லாரியை மீட்பதற்காக கிரேன் ஒன்று காணுருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கண்டெய்னர் லாரியை மீட்கும் பணியில் கிரேன் மூலம் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது கிரேனும் கவிழ்ந்து அதே பள்ளத்தில் விழுந்தது. கிரேன் விழுந்ததில் அந்த பகுதியில் இருந்த மின்கம்பம் முற்றிலுமாக உடைந்து சேதமானது. திருவாரூரில் இருந்து மேலும் 2 கிரேன்கள் வரவழைக்கப்பட்டு பள்ளத்தில் கவிழ்ந்த கண்டெய்னர் லாரி மற்றும் கிரேன் மீட்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்