ரூ.28 லட்சம் அன்னதான நிதி வழங்குவதற்கான ஆணை
மகாதேவசுவாமி கோவிலுக்கு ரூ.28 லட்சம் அன்னதான நிதி வழங்குவதற்கான ஆணையை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகா, காங்குப்பம் கிராமத்தில் மகாதேவமலையில் மகாதேவ சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்து சமய அறநிலைத்துறை சார்பில் அன்னதான பற்றாக்குறை நிதியாக கடந்த 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் 2019-ம் ஆண்டு மார்ச் 31-ந்் தேதி வரையிலான காலத்திற்கு ரூ.28 லட்சத்து 28 ஆயிரத்து 840 வழங்குவதற்கான ஆணையை அமைச்சர் துரைமுருகன் நேற்று காட்பாடியில் வழங்கினார். இதனை அமைச்சரிடம் இருந்து மகானந்த சித்தர் சுவாமிகள் பெற்றுக் கொண்டார். அப்போது மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் அசோகன் உள்பட பலர் உடன் இருந்தனர்.