புகையிலை பொருட்கள் விற்ற மூதாட்டி கைது

புகையிலை பொருட்கள் விற்ற மூதாட்டியை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2023-07-07 18:45 GMT

கூடலூர் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் அரசமரம் பஸ் நிறுத்தம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கடைகளில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு உள்ள ஒரு பெட்டி கடையில் வீரம்மாள் (வயது 74) என்பவர், அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அங்கிருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்