கடித்த பாம்புடன் சிகிச்சைக்கு வந்த மூதாட்டி
கடித்த பாம்புடன் மூதாட்டி சிகிச்சைக்கு வந்தார்.;
இளையான்குடி
இளையான்குடி அருகே உள்ள மேலத்துறையூர் கிராமத்தில் 100 நாள் திட்ட பணியாளர்கள் கிராமத்தில் உள்ள கண்மாயை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சாணாரேந்தர் கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகரன் மனைவி சரோஜா(70) என்பவரை விஷ பாம்பு கடித்துவிட்டது. இதனால் அவர் அலறினார். தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் பாம்பை அடித்து கொன்று, அதை 108 ஆம்புலன்சில் மூதாட்டி சரோஜாவுடன் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரியில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படும் நிலையில் உயிரிழந்த பாம்பும் 108 ஆம்புலன்ஸில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.