பொள்ளாச்சி அருகே கிணற்றில் மூதாட்டி தவறி விழுந்தார்; காப்பாற்ற முயன்ற 2 பேரும் தண்ணீரில் தத்தளிப்பு-3 பேரையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

பொள்ளாச்சி அருகே 60 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டியை காப்பாற்ற முயன்ற 2 பேரும் தண்ணீரில் தத்தளித்தனர். இவர்கள் 3 பேரையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

Update: 2022-09-02 16:19 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே 60 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டியை காப்பாற்ற முயன்ற 2 பேரும் தண்ணீரில் தத்தளித்தனர். இவர்கள் 3 பேரையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி

பொள்ளாச்சி அருகே பெத்தநாயக்கனூர் மேட்டுக்காடு பகுதியில் உள்ள தோட்டத்திற்கு அதேப்பகுதியை சேர்ந்த சின்ப்பன் என்பவரின் மனைவி சின்னமணி (வயது 61) என்பவர் விவசாய பணிக்கு வந்தார். அப்போது, தோட்டத்தில் உள்ள கிணற்றின் அருகே பம்புசெட்டில் மோட்டாரை இயக்க சென்று உள்ளார். இதில் எதிர்பாராதவிதமாக 60 அடி ஆழ கிணற்றில் சின்னமணி தவறி விழுந்தார். இதனால் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டு இருந்த அவர், காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அப்பகுதியைச் சேர்ந்த 2 வாலிபர்கள் மூதாட்டியை மீட்பதற்காக கிணற்றுக்குள் குதித்தனர்.

3 பேர் மீட்பு

இதையடுத்து மூதாட்டியை மீட்டு கிணற்றில் இருந்த கயிற்றைப் பிடித்து மேலே வர முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதனால் மூதாட்டி உள்பட 3 பேரும் கிணற்றில் தத்தளித்தனர். இதனை கவனித்த அந்த வழியாக சென்றவர்கள் இதுபற்றி பொள்ளாச்சி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் பிரபாகரன் (பொறுப்பு) தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் கயிறு கட்டி கிணற்றுக்குள் உயிருக்கு போராடிய மூதாட்டி மற்றும் 2 வாலிபர்களைபத்திரமாக மீட்டு மேலே கொண்டு வந்தனர். மூதாட்டி உள்பட 3 பேரை கிணற்றில் இருந்த மீட்ட தீயணைப்பு வீரர்களை பொதுமக்கள் பாராட்டினார்கள்.

இந்த சம்பவம் அந்தப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்