கிணற்றில் மூழ்கி மூதாட்டி சாவு
கிணற்றில் மூழ்கி மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
விருதுநகர் அருகே உள்ள சங்கரலிங்காபுரத்தை சேர்ந்தவர் ஜீவானந்தம் (வயது 54). இவரது தாயார் அமராவதி (80). சம்பவத்தன்று இவர் ஊர் பொது கிணற்றில் குளிக்க சென்ற போது தண்ணீரில் மூழ்கி இறந்தார். இதையடுத்து தீயணைப்பு படையினரின் உதவியுடன் அமராவதி உடலை ஜீவானந்தம் மீட்டார். இதுகுறித்து ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.