திருப்புவனம் அருகே மின்சார கம்பி அறுந்து விழுந்து மூதாட்டி பலி
திருப்புவனம் அருகே மின்சார கம்பி அறுந்து விழுந்து மூதாட்டி பலியானார்.
திருப்புவனம்
திருப்புவனம் போலீஸ் சரகத்தை சேர்ந்த பனையனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் மந்தச்சி (வயது 65). மூதாட்டியான இவர் வயலில் கரும்பு சாகுபடி செய்து உள்ளார். அதன் அருகே கருவேல மரம் பெரிதாக வளர்ந்துள்ளது. கரும்பு வயலில் கருவேல மரத்தின் நிழல் படுவதால், கருவேல மரத்தை அரிவாளால் அடிப்பகுதியில் வெட்டியுள்ளார். அப்போது கருவேல மரம் அருகே மின்சார கம்பி மீது விழுந்தது. இதில் மின்சார கம்பி அறுந்து கீழே நின்றிருந்த மந்தச்சி மீது விழுந்தது.
இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். இந்த சம்பவம் குறித்து திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.