மனு அளிக்க ஆம்புலன்சில் வந்த மூதாட்டி

பாதுகாப்பு அளிக்கக்கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு ஆம்புலன்சில் மூதாட்டி ஒருவர் மனு அளிக்க வந்தார்.

Update: 2023-09-01 17:16 GMT

ஆம்புலன்சில் வந்த மூதாட்டி

சென்னை ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்தவர் சாந்தா (வயது 72). இவர் தனது தங்கை ஆதரவுடன் ஆம்புலன்சில் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தார். போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

சாந்தாவுக்கு 3 மகள்கள் உள்ளனர். கணவனை இழந்த அவர் சென்னையில் தங்கியிருந்தார். அப்போது சில நாட்களுக்கு முன்பு அவர் குளியலறையில் தவறி கீழே விழுந்துள்ளார். இதையடுத்து அவர் தனது தங்கை ஆதரவில் தொரப்பாடியில் தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவருக்கு ஏற்கனவே குடும்பப்பிரச்சினை இருந்துள்ளது.

பாதுகாப்பு கேட்டு

அதில் அவரது சிகிச்சைக்கு ஒரு மகள் இடையூறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் சாந்தா தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு ஆம்புலன்சில் மனு அளிக்க வந்த மூதாட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்