தென்பெண்ணை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட முதியவர்
தென்பெண்ணை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட முதியவரை வாலிபர்கள் துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்டனர்
வாணாபுரம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள குமாரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னதுரை (வயது 65).
இவர் கடந்த சில தினங்களாக அகரம்பள்ளிப்பட்டு, தொண்டாமனூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உறவினர்கள் வீட்டில் தங்கி இருந்தார்.
இந்த நிலையில் இன்று காலை அகரம்பள்ளிப்பட்டு பகுதிகளில் இருந்து தொண்டாமனூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக தென்பெண்ணை ஆற்றில் இறங்கினார்.
அப்போது அவர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார்.
இந்த நிலையில் தொண்டாமனூர் அருகே உள்ள ஒரு பகுதியில் சில வாலிபர்கள் முதியவரின் அலறல் சத்தம் கேட்டு உடனடியாக தென்பெண்ணை ஆற்றில் இறங்கி அவரை உயிருடன் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
மேலும் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சின்னதுரையை மீட்டு தண்டராம்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
உயிருக்கு போராடிய முதியவரை உயிருடன் மீட்ட வாலிபர்களுக்கு அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.