கிராம நிர்வாக அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்து தீக்குளிக்க முயன்ற முதியவர் கைது
கிராம நிர்வாக அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்து தீக்குளிக்க முயன்ற முதியவர் கைது செய்யப்பட்டார்.
கடவூர் தாலுகா பாலவிடுதி அருகே உள்ள ஆறுமுகத்தான் தெருவை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 65). விவசாயி. இவர் சம்பவத்தன்று தாந்தோணிமலை கிராம நிர்வாக அதிகாரி விஜயிடம், தனது நிலப் பிரச்சினை குறித்து மனு கொடுத்தார். பின்னர் மனு குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி, விஜயை காளியப்பன் தகாத வார்த்தையால் திட்டி பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், கலெக்டர் அலுவலகத்தில் மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதுகுறித்து விஜய் கொடுத்த புகாரின்பேரில், தாந்தோணிமலை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வன் வழக்குப்பதிந்து, காளியப்பனை கைது செய்து சிறையில் அடைத்தார்.