லாட்டரி சீட்டு விற்ற முதியவர் கைது
கம்பத்தில் லாட்டரி சீட்டு விற்ற முதியவரை போலீசார் கைது செய்தனர்
கம்பம் சர்ச் தெரு பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்ற கம்பம் தாத்தப்பன் குளத்தை சேர்ந்த அப்பாஸ் (வயது 62) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 205 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.