மது விற்ற முதியவர் கைது

மது விற்ற முதியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-05-20 18:30 GMT

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே மெய்க்காவல் புத்தூர் கிராமத்தில் மதுபானங்கள் பதுக்கி வைத்து விற்கப்படுவதாக பல்வேறு புகார்கள் வந்தது. இதையடுத்து, மீன்சுருட்டி சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் தலைமையிலான போலீசார் மெய்க்காவல்புத்தூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (வயது 75) என்பவர் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த 15 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்