அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் மது விற்ற வானத்திரையான்பட்டினம் கிராமத்தை சேர்ந்த செல்வராஜை(வயது 67) கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.